ADDED : ஜூலை 31, 2024 02:55 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 39. தனியார் நிறுவன ஊழியர்.
இவர், நேற்று காலை தன் மின்சார இரு சக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு வந்தார். பின், அதே வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கமலா தியேட்டர் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து லேசான புகை வருவதை கண்ட ரமேஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். அப்போது, திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதற்குள், இருசக்கர வாகனம் முழுதும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.