Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வெண்டைக்காய் விதை ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை

வெண்டைக்காய் விதை ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை

வெண்டைக்காய் விதை ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை

வெண்டைக்காய் விதை ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை

ADDED : ஜூலை 26, 2024 11:06 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை ஆய்வக வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வெண்டைக்காய் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காய்கறி பயிர். இதில் வைட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது. வெண்டைக்காய் எவ்வித மண் வகையிலும் பயிரிடலாம்.

ஜூன்-ஆக., மற்றும் பிப்.,-மார்ச் ஆகிய பருவங்களில் நன்கு வளரும். இரண்டரை ஏக்கருக்கு 7.5 கிலோ விதை தேவை.

வெண்டைக்காயில் காய் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த இனகவர்ச்சி பொறி 12 வைக்க வேண்டும். கார்பரில் நனையும் துாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து தெளிக்கவேண்டும்.

மஞ்சள் நரம்பு தோல் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈக்களை, வேம்பு எண்ணெய், ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.

பயிரிட்டு, 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். இரண்டரை ஏக்கருக்கு, 12,000-15,000 கிலோ காய்கள் கிடைக்கும்.

வெண்டை காய்கறி விதை விதைப்பதற்கு முன், அதை பரிசோதனை செய்து, ஈரப்பதம் 10 சதவீதம், புறத்துாய்மை 99 சதவீதம் மற்றும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் 65 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், வெண்டை விதையை, 100 கிராம் அளவில், திருவள்ளூர், பெரியகுப்பத்தில் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி, விதை தரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us