/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆரணியில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் மையம் ஆரணியில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் மையம்
ஆரணியில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் மையம்
ஆரணியில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் மையம்
ஆரணியில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் மையம்
ADDED : ஜூலை 07, 2024 01:22 AM

ஆரணி:ஆரணியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், கத்திரி, வெண்டை, முள்ளங்கி, கீரை உள்ளிட்ட சாகுபடிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
விதை மற்றும் வேளாண் இடு பொருட்கள் பெற வசதியாக, ஆரணியில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பேரில், அங்குள்ளகாய்கறி சந்தை அருகே வேளாண் விரிவாக்க மையகட்டடம் நிறுவ, 50 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த, 2023ம் ஆண்டு மார்ச்சில் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், ஆறு மாதங்களுக்குமுன் பணிகள் நிறைவு பெற்றன. அதன்பின் அந்த விரிவாக்க மையம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து சோழ வரம் ஒன்றிய வேளாண் அலுவலர் ஒருவர்கூறுகையில், 'கட்டுமான பணிகளை மேற்கொண்ட வேளாண்மை விற்பனைவாரியம், இதுவரை அந்த விரிவாக்க மையத்தை எங்களிடம் ஒப்படைக்க வில்லை. ஒப்படைத் ததும் உடனடியாக திறக்கப்பட்டு விவசாயிகளின்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' எனதெரிவித்தார்.