/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடை காலம் முடிந்து ஆர்வமுடன் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தடை காலம் முடிந்து ஆர்வமுடன் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்
தடை காலம் முடிந்து ஆர்வமுடன் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்
தடை காலம் முடிந்து ஆர்வமுடன் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்
தடை காலம் முடிந்து ஆர்வமுடன் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்
ADDED : ஜூன் 17, 2024 03:50 AM

பழவேற்காடு : பழவேற்காடு மீனப்பகுதியில், 35க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக, 61 நாட்களுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த, ஏப்ரல், 15ல் துவங்கியது.
தடை காலத்தில் பெரிய இயந்திர படகுகள், விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை. பழவேற்காடு பகுதியை பொறுத்துவரை பைபர் படகுகள், நாட்டுப்படகுகுகள், கட்டுமரம் ஆகியவற்றை பயன்படுத்தி மீனவர்கள் மீன்படி தொழில் செய்யலாம்.
இருப்பினும், பழவேற்காடு மீனவர்கள் தடைகாலத்தில் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர். தற்போது தடை காலம் முடிந்து, கடந்த, இரு தினங்களாக பைபர் படகுகளில், சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
தற்போது மீனவர்கள் வலையில் அயிலா எனப்படும் கானாங்கெளுத்தி மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன. விலை குறைவு என்றாலும், எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருகிறது. இவை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த இருதினங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்வதால் மீன் இறங்குதளம் பகுதி பரபரப்பாக இருக்கிறது. தடைகாலம் முடிந்ததால், மீனவர்கள் தற்போது பிசியாக தொழில் புரிந்து வருகின்றனர்.