/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தவறான சிகிச்சையால் வாலிபர் பலி? தனியார் மருத்துவமனை முற்றுகை தவறான சிகிச்சையால் வாலிபர் பலி? தனியார் மருத்துவமனை முற்றுகை
தவறான சிகிச்சையால் வாலிபர் பலி? தனியார் மருத்துவமனை முற்றுகை
தவறான சிகிச்சையால் வாலிபர் பலி? தனியார் மருத்துவமனை முற்றுகை
தவறான சிகிச்சையால் வாலிபர் பலி? தனியார் மருத்துவமனை முற்றுகை
ADDED : ஜூன் 11, 2024 05:44 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசித்தவர் மகேஷ், 30. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தொடர் வாந்தி எடுத்த நிலையில், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள ‛ஆல்பா' என்ற பெயரில் இயங்கி வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்த போது உடல் நிலை மோசமானதால், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் மகேஷ் உயிரிழந்ததாக தெரிவித்து, நேற்று காலை, அந்த தனியார் மருத்துவமனையை உறவினரும், கிராம மக்களும் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சமாதானம் பேசினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
அதன்பின் சமாதானம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.