/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஜூன் 13, 2024 12:26 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் திருத்தணி, பொன்னேரி, சோழவரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், பூந்தமல்லி, திருமழிசை மற்றும் செவ்வாப்பேட்டை ஆகிய இடங்களில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
மொத்தம் 38 விடுதிகளில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியரும் தங்கி உணவு அருந்தி கல்வி பெறலாம். உரிய இடஒதுக்கீடு விதிகளின் படி விடுதியில் சேர்க்கை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு பாய், போர்வை வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.
கல்லுாரி விடுதிகளில், 'ஸ்மார்ட் டிவி' மற்றும் இணைய சேவை உள்ளதால், பாடம் படிப்பதுடன், போட்டி தேர்வுக்கான பயிற்சி வசதியும் உள்ளது.
மேலும் 10, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட காப்பாளரிடம் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.