/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 28, 2024 02:40 AM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதாக கூறி, ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் எனக் கூறி தனிநபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ பணம் அல்லது வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 044- 2766 2935, 94999 33496 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
l திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு கல்வி, இயன்முறை பயிற்சி, தொழிற்பயிற்சி அளித்தல்; மறு வாழ்வு பணிகள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்- 2016ன் படி பதிவு சான்று மற்றும்அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது.
இது நாள் வரை மேற்கண்ட சட்டத்தின் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறவேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.