/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின் கம்பத்தில் ஏறிய ஒயர்மேன் விழுந்து பலி மின் கம்பத்தில் ஏறிய ஒயர்மேன் விழுந்து பலி
மின் கம்பத்தில் ஏறிய ஒயர்மேன் விழுந்து பலி
மின் கம்பத்தில் ஏறிய ஒயர்மேன் விழுந்து பலி
மின் கம்பத்தில் ஏறிய ஒயர்மேன் விழுந்து பலி
ADDED : ஜூன் 08, 2024 12:54 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் நெடும்பரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 45. இவர் கனகம்மாசத்திரம் மின்பகிர்மான அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு நெடும்பரம் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. அங்குள்ள மின்கம்பத்தில் ஒயர் சேதத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறிய பழனி கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்ட சக ஊழியர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று காலை, உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.