/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 11:07 PM

பொன்னேரி: பொன்னேரி - ஆலாடு சாலையில் இருந்து, ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை, கடந்த, நான்கு மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.
மழைநீர் செல்வதற்காக, சாலையோரத்தில் கால்வாயும் அமைக்கப்பட்டது. இந்த சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்களை மாற்று இடத்தில் பொருத்தாமல் சாலை அமைக்கப்பட்டது.
இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. ஆலாடு சாலை -ரயில் நிலைய சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள மின்கம்பத்தால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ரயில் நிலைய சாலையில், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையும் செயல்படுகிறது.
இடையூறாக உள்ள மின்கம்பங்களால் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை உடனடியாக மாற்று இடத்தில் பொருத்த நகராட்சி மற்றும் மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.