/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்பாடி மேட்டு காலனியில் குண்டும் குழியுமான தார்்சாலை பொன்பாடி மேட்டு காலனியில் குண்டும் குழியுமான தார்்சாலை
பொன்பாடி மேட்டு காலனியில் குண்டும் குழியுமான தார்்சாலை
பொன்பாடி மேட்டு காலனியில் குண்டும் குழியுமான தார்்சாலை
பொன்பாடி மேட்டு காலனியில் குண்டும் குழியுமான தார்்சாலை
ADDED : ஜூன் 23, 2024 02:06 AM

திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி மேட்டு காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் பல்வேறு அத்திவாசிய பணிகள் காரணமாக, கிராமத்தில் இருந்து 1 கி.மீ., துாரம் ஊராட்சி தார்ச்சாலை வழியாக சென்னை--- -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி தார்ச்சாலை முறையாக பராமரிக்காததால் தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் பொன்பாடி மேட்டு காலனிக்கு செல்லும் தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், 'ஊராட்சி சாலை சீரமைப்பதற்கு ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். தற்போது ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால் சாலை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் விரைவில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.