/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் இறைச்சி கழிவுகள் உண்ண வரும் நாய்களால் தொல்லை சாலையோரம் இறைச்சி கழிவுகள் உண்ண வரும் நாய்களால் தொல்லை
சாலையோரம் இறைச்சி கழிவுகள் உண்ண வரும் நாய்களால் தொல்லை
சாலையோரம் இறைச்சி கழிவுகள் உண்ண வரும் நாய்களால் தொல்லை
சாலையோரம் இறைச்சி கழிவுகள் உண்ண வரும் நாய்களால் தொல்லை
ADDED : ஜூலை 21, 2024 06:48 AM

பொன்னேரி: பொன்னேரி- தச்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள முஸ்லீம் நகர், பெருஞ்சேரி ஆகிய இடங்களில் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
இதிலுள்ள கழிவுகளை உண்பதற்காக அப்பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மூட்டையாக கட்டி கொண்டு வந்து இங்கு வீசி செல்கின்றனர்.
இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.