/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆட்டு கொட்டைகையாக மாறிய சுகாதார வளாகம் ஆட்டு கொட்டைகையாக மாறிய சுகாதார வளாகம்
ஆட்டு கொட்டைகையாக மாறிய சுகாதார வளாகம்
ஆட்டு கொட்டைகையாக மாறிய சுகாதார வளாகம்
ஆட்டு கொட்டைகையாக மாறிய சுகாதார வளாகம்
ADDED : ஜூலை 26, 2024 02:25 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் கிழக்கில், அரசு தொடக்க பள்ளி, கிராம சேவை மையம், நுாலக கட்டடம், சுகாதார மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இதில், சுகாதார மையமும், நுாலக கட்டடமும் பொது பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டன. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே துணை சுகாதார நிலையமும், செல்லாத்தம்மன் கோவில் அருகே ஊரக நுாலகமும் அமைந்துள்ளன.
இந்நிலையில், பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட சுகாதார மையத்தின் பழைய கட்டடத்தில் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
அரசு கட்டடங்களில் கால்நடைகள் வளர்க்கப்படுவதால், அரசு நிதி வீணாகிறது. மேலும், கட்டடம் உறுதியாக உள்ள நிலையில், அந்த கட்டடத்தையும், அதையொட்டி உள்ள நுாலக கட்டடத்தையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.