/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு
பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு
பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு
பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு
ADDED : ஜூலை 21, 2024 06:46 AM
ஊத்துக்கோட்டை: திருவாலங்காடு, ராமலிங்காபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாப்புலம்மா, 75. நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை, ஊத்துக்கோட்டை வந்துள்ளார். அங்கு திருவள்ளூர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
இரவு, 8:00 மணிக்கு திருவள்ளூர் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இருக்கையில் அமர்ந்த பின் தான் கையில் கொண்டு வந்த பையில் இருந்த, 4 சவரன் செயின், 3 சவரன் வளையல், அரை சவரன் மோதிரம் ஆகியவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.