/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 03, 2024 04:34 AM
அரக்கோணம்: வடமாநிலங்களில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்துவதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து, கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளம் நோக்கி, அரக்கோணம் மார்க்கமாக சென்றது.
அப்போது, அரக்கோணம் நிலையம் வந்தடைந்த ரயிலின் பெட்டிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ரயிலின் பொது பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பையை சோதனை செய்ததில், ஆறு பண்டல்களில் 6.50 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காஞ்சிபுரம் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.