/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா கடத்திய 6 பேர் கைது; கார் பறிமுதல் குட்கா கடத்திய 6 பேர் கைது; கார் பறிமுதல்
குட்கா கடத்திய 6 பேர் கைது; கார் பறிமுதல்
குட்கா கடத்திய 6 பேர் கைது; கார் பறிமுதல்
குட்கா கடத்திய 6 பேர் கைது; கார் பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2024 12:57 AM
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரைபெரும்புதுார் பகுதியில் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டி.என். 19.டி. 0979 என்ற பதிவெண் கொண்ட போர்டுபிகோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், வி.1 என 177 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்குமென திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து போதைப்பாக்குகள் கொண்டு வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்டாராம், 35, தயாராம், 22 ஆகிய இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். போலீசார் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
↓அதே போல் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு இரண்டு பைக்குகள் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடி வழியே வந்தது. அங்கிருந்த போலீசார் பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட, விமல், 135, வி.ஐ., 135, ஹான்ஸ், 85, கூலிப், 10 என 41 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன.
இது தொடர்பாக இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேரை விசாரித்ததில், அவர்கள் அம்பத்துார் அருகே, உள்ள கள்ளிக்குப்பம் வேழவேந்தன், 53, வெங்கடசுப்புலு, 48, கொடுங்கையூர் பரமசிவம், 62, தண்டையார்பேட்டை மேகலா, 35 என்பது தெரிந்தது.
குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.