Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதுமண தம்பதியரால் களைகட்டிய திருத்தணி ஒரே நாளில் 50 திருமணங்கள்

புதுமண தம்பதியரால் களைகட்டிய திருத்தணி ஒரே நாளில் 50 திருமணங்கள்

புதுமண தம்பதியரால் களைகட்டிய திருத்தணி ஒரே நாளில் 50 திருமணங்கள்

புதுமண தம்பதியரால் களைகட்டிய திருத்தணி ஒரே நாளில் 50 திருமணங்கள்

ADDED : ஜூன் 13, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆர்.சி.மண்டபத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடத்தியும், அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஒரு ஜோடிக்கு, 5,000 ரூபாய் கட்டணத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. சிலர், முருகன் கோவிலில் திருமணம் நடத்துவதாக வேண்டுதல் இருப்பதால் முகூர்த்த நாளில், அதிக பட்சமாக, 60க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

இதற்காக ஆர்.சி.மண்டபத்தில், 10 இடங்களில் மணமேடை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், மலைக்கோவிலில் மட்டும், 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கமாக வரும் பக்தர்கள் என, ஆயிரக்கணக்கானோர் தேர்வீதியில் மூலவரை தரிசிக்க குவிந்தனர்.

மேலும், திருத்தணி நகரத்தில், 35க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்திற்கு வந்தவர்களும், புதுமண தம்பதியினரும் மூலவரை தரிசிக்க மலைக்கோவிலுக்கு குவிந்தனர்.

இதனால், பொது வழியில், மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us