/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புட்லுாரில் ஆஸ்பத்திரி இன்றி 5 கி.மீ., பயணிக்கும் நோயாளிகள் புட்லுாரில் ஆஸ்பத்திரி இன்றி 5 கி.மீ., பயணிக்கும் நோயாளிகள்
புட்லுாரில் ஆஸ்பத்திரி இன்றி 5 கி.மீ., பயணிக்கும் நோயாளிகள்
புட்லுாரில் ஆஸ்பத்திரி இன்றி 5 கி.மீ., பயணிக்கும் நோயாளிகள்
புட்லுாரில் ஆஸ்பத்திரி இன்றி 5 கி.மீ., பயணிக்கும் நோயாளிகள்
ADDED : ஜூலை 31, 2024 03:03 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றியம், புட்லுார் கிராமத்தில், 2,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில், பெருமாள்பட்டு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், புட்லுார் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலானதால், கட்டடம் சேதமடைந்து, பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, கிராமவாசிகள் சுகாதார துறை அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டருக்கு பலமுறை மனு அளித்தனர்.
இந்த நிலையில், 2022ம் ஆண்டு சுகாதார துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, 'புதிய சுகாதார நிலையம் கட்டப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து, புட்லுார் தோப்பு புறம்போக்கு நிலத்தில், 650 ச.மீட்டர் பரப்பளவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, 2022ல் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதனால், கிராம வாசிகள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கர்ப்பிணியர், 5 கி.மீ., பயணித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
வேறு வழியின்றி, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் நிலை உருவாகி உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை சீர்படுத்த, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.