/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை ரயிலில் அடிபட்டு 40 கால்நடைகள் பலி பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை ரயிலில் அடிபட்டு 40 கால்நடைகள் பலி
பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை ரயிலில் அடிபட்டு 40 கால்நடைகள் பலி
பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை ரயிலில் அடிபட்டு 40 கால்நடைகள் பலி
பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை ரயிலில் அடிபட்டு 40 கால்நடைகள் பலி
ADDED : ஜூன் 07, 2024 02:12 AM

திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கத்தில் புறநகர் ரயில், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் என, தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த மார்க்கத்தில், ரயில் நிலையம் ஒட்டி சின்னம்மாபேட்டை, மணவூர், தொழுதாவூர், மருதவல்லிபுரம், அரிச்சந்திராபுரம் உட்பட பல கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் தண்டவாளத்தைக் கடந்து, ஏரிப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.
அப்படி ஓட்டிச் செல்லப்படும் கால்நடைகள், ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கால்நடைகள் ரயிலில் சிக்கினால் குறைந்தது, 20 -- 30 நிமிடம் வரை நிறுத்தி இயக்கப்பட வேண்டி உள்ளது.
இதனால், ரயில் பயணியர் அவதியடைகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும், 40 கால்நடைகள் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த பகுதிகளில் கால்நடைகள் சென்று வர ரயில் தண்டவாளத்தின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை ரயில்வே துறையினர் பராமரிக்காததால், ஆங்காங்கே தூர்ந்து போய் உள்ளது.
இதை சீரமைத்தால் கால்நடைகள் அவ் வழியே செல்ல வசதியாக இருக்கும் என, கால்நடை வளர்ப்போர் கூறுகின்றனர். மேலும் கால்நடைகள் விபத்தில் சிக்குவதையும் தடுக்க முடியும் என்கின்றனர்.
எனவே, இந்த சுரங்கப்பாதையை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.