/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வெங்கல் சிவன் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு வெங்கல் சிவன் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
வெங்கல் சிவன் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
வெங்கல் சிவன் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
வெங்கல் சிவன் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 06, 2024 06:16 AM

ஊத்துக்கோட்டை, : வெங்கல் அருகே செம்பேடு கிராமத்தில், சிவலிங்கம் மற்றும் நந்திதேவன் சிலை உள்ளது. இங்கு, கொட்டகை அமைத்து, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில், நேற்று காலை கிராமத்தில் உள்ள சிறுவர் - சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுமி ஒருவரின் காலில் கல் பட்டு வலியால் துடித்தார்.
அக்கம்பக்கம் இருந்தவர்கள் சென்று சிறுமியை துாக்கிய நிலையில், பூமிக்கு அடியில் இருந்த பொருளை எடுக்க முயன்றனர். அப்போது, சிறிய பொருள் என நினைத்தவர்கள், பெரிய அளவில் பொருள் இருப்பது போல் தெரிந்து, அதிகளவு மக்கள் கோவிலில் கூடினர்.
அனைவரும் அதை தோண்டி எடுத்தனர். அப்போது நடராஜர் சிலை, சிவபெருமான், அம்மன் சிலைகள் இருந்துள்ளன.
வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, மூன்று சிலைகள் இருந்தது தெரிந்தது. கிராம மக்கள் சிலைகளுக்கு குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மூன்று சிலைகளும் உலோகத்தால் ஆனதால், இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பின், சிலைகள் குறித்து மேலும் தகவல் கிடைக்கும்.
இந்த சிலைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம், பாளூரில், போர் வீரன் தன் தலையை கத்தியால் வெட்டி பலி கொடுக்கும் அரிகண்டம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித்தமிழன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள், செங்கல்பட்டு பாலாறு கரைப்பகுதிகளில் கள ஆய்வு செய்தனர்.
அதில், பாளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பல்லவர் கால சிவன் கோவில் அருகில், சாலையோரம் மண்ணில் புதைந்த நிலையில் சிலை இருப்பதை அறிந்தனர். அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அது அரிகண்டம் சிலை என்பது தெரிந்தது.
இச்சிலை, 3.5 அடி உயரம் உள்ளது. இச்சிலை விஜயநகர பேரசு காலமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.