/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீவிர சிகிச்சைக்கு பின் குணமான எடை குறைவான 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்கு பின் குணமான எடை குறைவான 2 குழந்தைகள்
தீவிர சிகிச்சைக்கு பின் குணமான எடை குறைவான 2 குழந்தைகள்
தீவிர சிகிச்சைக்கு பின் குணமான எடை குறைவான 2 குழந்தைகள்
தீவிர சிகிச்சைக்கு பின் குணமான எடை குறைவான 2 குழந்தைகள்
ADDED : ஜூலை 03, 2024 12:41 AM

திருவள்ளூர்,:ஒரு கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கு என்று,பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு 20 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டுவருகிறது.
இப்பிரிவில் கடந்த மே மாதத்தில் 980 கிராம் எடையுடன் பிறந்த அலமாதியை சேர்ந்த அப்ரோஸ் மற்றும் ஏனம்பாக்கத்தை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோரின் குழந்தைகளுக்கு, 'வென்டிலேட்டர்' மற்றும் மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை கொடுக்கப்பட்டது.
ஒரு மாதம் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின், நேற்று நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அக்குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு கிலோவிற்கு குறைவான பச்சிளம் குழந்தைகளை பராமரித்து காப்பாற்றுவது சவாலான விஷயம் என்பதால், சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களையும் செவிலியர்களையும் டீன் ரேவதி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சுரேஷ்பாபு, மருத்துவமனை நிலைய மற்றும் துணை அலுவலர்கள் மருத்துவர்கள் ராஜ்குமார், பிரபுசங்கர் மற்றும் குழந்தை நல பிரிவின் தலைமை மருத்துவர்கள் ஸ்டாலின், ஸ்ரீதேவி மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவின் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.