/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பிளஸ் 2 மாணவனுக்கு சூடு தாய் உள்பட 2 பேர் கைது பிளஸ் 2 மாணவனுக்கு சூடு தாய் உள்பட 2 பேர் கைது
பிளஸ் 2 மாணவனுக்கு சூடு தாய் உள்பட 2 பேர் கைது
பிளஸ் 2 மாணவனுக்கு சூடு தாய் உள்பட 2 பேர் கைது
பிளஸ் 2 மாணவனுக்கு சூடு தாய் உள்பட 2 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2024 12:41 AM
திருத்தணி, திருத்தணி அருகே சென்னை--- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அன்னபூரனி தெருவைச் சேர்ந்தவர் மோகன முரளி. இவர் மனைவி பூர்ணிமா, 40, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மோகனமுரளி சாலை விபத்தில் இறந்தார்.
தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில் பூர்ணிமா, பூங்கா நகர் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீதர், பூர்ணிமாவை தேடி வந்தார்.
அப்போது மாணவன், எதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள் என ஸ்ரீதரிடம் கேட்டதால், ஆத்திரமடைந்த, பூர்ணிமா, அவரது சகோதரி அனி மற்றும் ஸ்ரீதர் ஆகிய மூவரும், மாணவனை, கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு, உடம்பில் கம்பியால் சூடு போட்டனர்.
மாணவன் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் வந்து மாணவனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவன் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பூர்ணிமா, அனி ஆகிய இருவரை கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.