/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடுத்தடுத்து இரு வீடுகளில் 14 சவரன் நகை கொள்ளை அடுத்தடுத்து இரு வீடுகளில் 14 சவரன் நகை கொள்ளை
அடுத்தடுத்து இரு வீடுகளில் 14 சவரன் நகை கொள்ளை
அடுத்தடுத்து இரு வீடுகளில் 14 சவரன் நகை கொள்ளை
அடுத்தடுத்து இரு வீடுகளில் 14 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 09, 2024 11:13 PM
ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை அருகே, கச்சூர் ஊராட்சி, ஸ்ரீராமகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரய்யா, 45. இவரது மகன்கள் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஈஸ்வரய்யா மகன்களை பார்க்க வீட்டை பூட்டி விட்டு, பொன்னேரி சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 8 சவரன் நகை, 40,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி, 42. இவரும் படிப்பிற்காக தன் குழந்தைகளை திருவள்ளூரில் தனியார் பள்ளியில் சேர்த்துஉள்ளார்.
நேற்று முன்தினம் குழந்தைகளை பார்க்க சென்று விட்டு வீடு திரும்பும்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 6 சவரன் நகை 20, 000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஈஸ்வரய்யா, வெங்கடசாமி கொடுத்த புகாரின் பேரில், பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.