/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை கோவில்களில் 12 கலசம் திருட்டு கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை கோவில்களில் 12 கலசம் திருட்டு
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை கோவில்களில் 12 கலசம் திருட்டு
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை கோவில்களில் 12 கலசம் திருட்டு
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை கோவில்களில் 12 கலசம் திருட்டு
ADDED : ஜூலை 18, 2024 11:00 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த கங்காணிமேடு கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் கோபுரத்தை கவனித்தபோது, அங்கு இருந்த, செம்பு உலோகத்தால் ஆன, நான்கு கலசங்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.
அதேபோன்று, கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே அய்யர்கண்டிகை கிராமத்தில் உள்ள, அவினாச்சியப்பர் சிவன் கோவில் கோபுரத்தில் இருந்த, எட்டு கலசங்களும் திருடப்பட்டு இருந்தன.
ஒரே நாளில் மர்ம நபர்கள், இரண்டு கோவில்களில் கோபு கலசங்களை திருடி சென்று உள்ளனர்.
இது தொடர்பாக, கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கெண்டு திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.