/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரியில் கடத்திய 10,800 கிலோ குட்கா பறிமுதல் லாரியில் கடத்திய 10,800 கிலோ குட்கா பறிமுதல்
லாரியில் கடத்திய 10,800 கிலோ குட்கா பறிமுதல்
லாரியில் கடத்திய 10,800 கிலோ குட்கா பறிமுதல்
லாரியில் கடத்திய 10,800 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2024 08:09 PM
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து சென்னைக்கு லாரிகள் வாயிலாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியா.சக்தி மேற்பார்வையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, பெத்திக்குப்பம் சந்திப்பில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.
இரு லாரிகளிலும், 10,800 கிலோ எடை மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா வகையைச் சேர்ந்த பான் மசாலா கேஸ்கள், தார்ப்பாய் போட்டு மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
லாரிகளுடன், குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், லாரி ஓட்டுனர்களான.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினகரன், 48, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த நரேஷ், 27.
குட்கா பொருட்கள் உரிமையாளர் சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த அரவிந்த் பாண்டே, 39, லாரி உரிமையாளர் மாதவரம் பகுதியைச் சேர்ந்த சங்கரன், 40, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து சென்னைக்கு ரெகுலராக குட்கா பண்டல்களை லாரிகளில் எடுத்துச் சென்றது தெரியவந்து.
லாரி உரிமையாளர்கள் மற்றும் குட்கா கடத்தலில் தொடர்புடைய நபர்களை தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.