ADDED : ஜூன் 13, 2024 12:27 AM
ஊத்துக்கோட்டை,:வெங்கல் அடுத்த பாகல்மேடு, அணைக்கட்டு, அம்மனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அம்மனம்பாக்கம் பகுதியில் போலீசாரை கண்டதும் ஒருவர் ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் அவரை துரத்தினர். ஆனால், அவர் தப்பிச் சென்றார்.
அவர் விட்டுச் சென்ற பையை சோதனை செய்ததில் கூலிப் 19.4 கிலோ, ஹான்ஸ் 28.9 கிலோ, விமல் 58.815 கிலோ என, மொத்தம் 107 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.