/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் 10 நாள் நவராத்திரி மகோற்சவம் வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் 10 நாள் நவராத்திரி மகோற்சவம்
வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் 10 நாள் நவராத்திரி மகோற்சவம்
வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் 10 நாள் நவராத்திரி மகோற்சவம்
வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் 10 நாள் நவராத்திரி மகோற்சவம்
ADDED : ஜூன் 04, 2024 05:40 AM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே வெலமகண்டிகை கிராமத்தில் வீரஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு இவ்விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. முதல் நாள் காலை 7:00 மணிக்கு கலசஸ்தாபனம், மூலவருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின், தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேகம் 9:00 -- 10:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம், 2:00 மணி வரை பஜனை நிகழ்ச்சி, மதியம் 2:00 -- 6:00 வரை ஹரிகதா கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வரும் 7ம் தேதி இரவு, 7:00 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.