ADDED : ஜன 07, 2024 01:53 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் 28. கட்டட தொழிலாளி. வீட்டு முன்பாக மழை நீர் தேங்கி கிடந்தது.
அதனை அப்புறப்படுத்துவதற்காக மோட்டாரை வைத்து ஆன் செய்துள்ளார்.
மோட்டார் ஓடாததால் அதை தூக்கிப் பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு 2022ல் திருமணமானது. மனைவி, ஒரு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
பேட்டை போலீசார் விசாரித்தனர்.