ADDED : மார் 16, 2025 02:15 AM

திருநெல்வேலி:தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் சஜி (எ )அந்தோணி சேவியர் 46. விஜயின் மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் நடக்க உள்ள அக்கட்சியின் மாநில பொதுக் குழுவில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று காலை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் இறந்தார். சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் இன்று காலை திருநெல்வேலி கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் நடக்கிறது.