/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : ஜூன் 06, 2025 02:58 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இருந்த பழமையான அரச மரம் மற்றும் கருங்காலி மரம் உட்பட நான்கு மரங்கள் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று வெட்டி அகற்றப்பட்டன.
திருநெல்வேலி முருகன் குறிச்சி பகுதியில் செயல்படும் அரசு சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அரச மரங்கள், கருங்காலி மரங்களை பொதுப்பணித்துறையினர் வெட்டி அகற்றினர். இது குறித்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்தனர்.
நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்றும்கூட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.
சித்த மருத்துவ பாடங்களில் அரச மரம் மற்றும் கருங்காலி மரங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அவை பயன்பட்டு வந்தன.
'கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லுாரியின் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் சேதமடைந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டுவதற்கும் தமிழக பட்ஜெட்டில் ரூ .40 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பணிகள் நடப்பதற்காக தற்போது மரங்கள அகற்றப்பட்டுள்ளன 'என முதல்வர் கோமளவள்ளி தெரிவித்துள்ளார்.