/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஸ்ரீவைகுண்டத்தில் தத்தளித்த ரயில் 16 நாட்களுக்கு பின் மீட்புஸ்ரீவைகுண்டத்தில் தத்தளித்த ரயில் 16 நாட்களுக்கு பின் மீட்பு
ஸ்ரீவைகுண்டத்தில் தத்தளித்த ரயில் 16 நாட்களுக்கு பின் மீட்பு
ஸ்ரீவைகுண்டத்தில் தத்தளித்த ரயில் 16 நாட்களுக்கு பின் மீட்பு
ஸ்ரீவைகுண்டத்தில் தத்தளித்த ரயில் 16 நாட்களுக்கு பின் மீட்பு
ADDED : ஜன 03, 2024 12:56 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் டிச.,17, 18ல் பலத்த மழை பெய்தது. கடந்த, 17ம் தேதி இரவு திருச்செந்துாரில் இருந்து கிளம்பிய செந்துார் எக்ஸ்பிரஸ், இரவு 9:00 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயிலில் 800 பயணியர் இருந்தனர்.
ரயில் தண்டவாளங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டதால், ரயிலை திருநெல்வேலி அல்லது திருச்செந்துாருக்கு ஓட்டிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனை சுற்றிலும் வெள்ளம் சென்றதால் ஸ்டேஷனிலிருந்தும் வெளியே வர முடியாமல் இரண்டு நாட்கள் பயணியர் ரயிலில் தவித்தனர்; பின், மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்துக்கும், செய்துங்கநல்லுாருக்கும் இடையே தண்டவாளத்தின் அரிப்பு ஏற்பட்ட பகுதிகள், தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.
இதனால், 16 நாட்களுக்குப் பின், நேற்று மதுரை ரயில்வே டிவிஷன் அதிகாரிகள், இன்ஜின் வாயிலாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு அந்த ரயிலை இழுத்து வந்தனர்.
திருநெல்வேலி - திருச்செந்துார் ரயில் தடத்தில், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடப்பதால், வரும் ஜன., 5 வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.