/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கான்ட்ராக்டரை கொல்ல முயற்சி மூன்று பேர் கைது கான்ட்ராக்டரை கொல்ல முயற்சி மூன்று பேர் கைது
கான்ட்ராக்டரை கொல்ல முயற்சி மூன்று பேர் கைது
கான்ட்ராக்டரை கொல்ல முயற்சி மூன்று பேர் கைது
கான்ட்ராக்டரை கொல்ல முயற்சி மூன்று பேர் கைது
ADDED : செப் 15, 2025 01:58 AM

திருநெல்வேலி:வள்ளியூர் அருகே முன் விரோதத்தில் கட்டடக் கான்ட்ராக்டர் கார் மீது வேன் மோதி கொலை செய்ய முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே டோனாவூரைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் 40. கட்டட கான்ட்ராக்டர். இவருக்கும், கண்டிகைப்பேரியைச் சேர்ந்த எட்வின் என்பவருக்கும் தொழில் தொடர்பான நட்பு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு விழாவில் பங்கேற்ற இருவருக்குமிடையே பகை ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, இஸ்ரவேல் தனது காரில் நண்பர்களுடன் டோனாவூருக்கு சென்று கொண்டிருந்தார்.
வள்ளியூர்-ஏர்வாடி ரோட்டில் ஒரு வேனில் வந்தவர்கள் இஸ்ரவேல் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் இஸ்ரவேலும், அவருடன் இருந்தவர்களும் உயிர் தப்பினர். இதனை விபத்து தான் என இஸ்ரவேல் நினைத்தார். ஆனால் இது கொலை முயற்சி என பின்னர் தெரிய வந்தது. இது குறித்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக எட்வின், முத்துராஜ், நம்பித்தங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.