/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேலப்பாளையத்தில் மோசடி சார்- - பதிவாளர் சஸ்பெண்ட் தினமலர் செய்தி எதிரொலிமேலப்பாளையத்தில் மோசடி சார்- - பதிவாளர் சஸ்பெண்ட் தினமலர் செய்தி எதிரொலி
மேலப்பாளையத்தில் மோசடி சார்- - பதிவாளர் சஸ்பெண்ட் தினமலர் செய்தி எதிரொலி
மேலப்பாளையத்தில் மோசடி சார்- - பதிவாளர் சஸ்பெண்ட் தினமலர் செய்தி எதிரொலி
மேலப்பாளையத்தில் மோசடி சார்- - பதிவாளர் சஸ்பெண்ட் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜன 25, 2024 01:33 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளர் ரவிக்குமார் தற்காலிக சார் - பதிவாளராக பணியாற்றி வந்தார். மேலப்பாளையத்தில் பல பீடி கம்பெனிகளின் நிலங்களை விற்றதில் சொத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு, பதிவு கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது புகார்எழுந்தது.
சென்னையில் வசிக்கும் பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான, என்.ஜி.ஓ., காலனியில் உள்ள நிலத்தை, மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுகுமாரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து போலியாக பத்திரப்பதிவு மேற்கொண்டார்.
அதுபோல, பலரின் சொத்துகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டன. இது குறித்து, 'தினமலர்' செய்தி வெளியிட்டது. மேலப்பாளையம் சார் பதிவக முறைகேடுகள் தொடர்பாக சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் அனுப்பியிருந்தார்.
புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட பத்திர பதிவுத் துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நேற்று ரவிக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சஸ்பெண்ட் காலத்தில் அவர் முன் அனுமதியின்றி திருநெல்வேலி தலைமை இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.