/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ சிகிச்சையில் மூதாட்டி பலி தனியார் கிளினிக்கிற்கு 'சீல்' சிகிச்சையில் மூதாட்டி பலி தனியார் கிளினிக்கிற்கு 'சீல்'
சிகிச்சையில் மூதாட்டி பலி தனியார் கிளினிக்கிற்கு 'சீல்'
சிகிச்சையில் மூதாட்டி பலி தனியார் கிளினிக்கிற்கு 'சீல்'
சிகிச்சையில் மூதாட்டி பலி தனியார் கிளினிக்கிற்கு 'சீல்'
ADDED : செப் 14, 2025 03:33 AM

திருநெல்வேலி:அனுமதியின்றி செயல்பட்ட தனியார் 'கிளினிக்'கில், சிகிச்சையின் போது மூதாட்டி இறந்ததால் கிளினிக்கிற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டணத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி சுப்பம்மாள், 65.
இவர் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இடது காலில் புண் ஏற்பட்டு நீர் சிந்தியதால் நேற்று முன்தினம் அடைக்கலபட்டணம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றார்.
ஆலங்குளம் முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த டாக்டர் சரவணகுமார் இதை நடத்தி வருகிறார். இவர், ரஷ்யாவில் மருத்துவம் பயின்று, தமிழகத்தில் பயிற்சி பெற்று, தமிழ்நாடு அரசு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றவர்.
டாக்டர், சுப்பம்மாளின் காலில் உள்ள புண்ணிலிருந்து நீரை அகற்றி, சிகிச்சை அளித்தபோது, சுப்பம்மாள் உயிரிழந்தார். உறவினர்கள் புகாரின் படி, பாவூர்சத்திரம் போலீசார் மூதாட்டி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
இதனிடையே மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேமலதா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அதில், கிளினிக் நடத்துவதற்கும், மருந்தகம் வைப்பதற்கும் உரிய அரசாணை அனுமதி பெறப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.