/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள் மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்புவெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள் மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள் மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள் மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள் மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
ADDED : ஜன 03, 2024 01:08 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெள்ளம் புகுந்ததால் சுரங்கத் துறை, முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 16 நாட்கள் ஆகியும் மீட்க முடியாமல் அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சுரங்கத் துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. டிச.17, 18ல் தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம் கரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை மூழ்கடித்தது.
கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த அரசு ஆவணங்கள் நீரில் மூழ்கின. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததில் அனைத்து கம்ப்யூட்டர்கள், அங்கு பணியாற்றும் 25க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சர்வீஸ் ரெக்கார்டுகள், அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேடுகள் நீரில் மூழ்கின.
முதன்மை கல்வி அலுவலகத்தில் எந்த புள்ளி விபரங்கள், ஆவணங்களும் இல்லாமல் தற்போது அலுவலகம் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளியின் கம்ப்யூட்டர் அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரியின் ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கின
புவியியல் சுரங்கத்துறையின் அலுவலகத்திலும் அனைத்து ஆவணங்கள், சுரங்கங்கள், கல்குவாரிகள் குறித்த பதிவேடுகளும் நீரில் மூழ்கி விட்டன. அவற்றை அலுவலர்கள் வெளியே காய வைத்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அரசு நிவாரண நிதி போன்ற பணிகளில் தற்போது முனைப்பு காட்டுவதால் பதிவேடுகள், ஆவணங்கள் குறித்து இனிதான் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.