/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ போலி பத்திரம் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி முத்துாட் நிறுவன பெண் மேலாளர் கைது போலி பத்திரம் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி முத்துாட் நிறுவன பெண் மேலாளர் கைது
போலி பத்திரம் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி முத்துாட் நிறுவன பெண் மேலாளர் கைது
போலி பத்திரம் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி முத்துாட் நிறுவன பெண் மேலாளர் கைது
போலி பத்திரம் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி முத்துாட் நிறுவன பெண் மேலாளர் கைது
ADDED : செப் 25, 2025 12:19 AM

திருநெல்வேலி:முதலீட்டிற்கு போலியான சான்றிதழ் கொடுத்து 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த முத்தூட் மினி நிறுவனத்தின் மேலாளர் முத்தம்மாள் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் முத்தூட் மினி நிதி நிறுவனம் உள்ளது.
அதன் மேலாளராக என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி முத்தம்மாள் உள்ளார்.
இவரிடம் எம்.கே.பி. நகரை சேர்ந்த டெய்லர் சாந்தி பிரியா என்பவர் 2023 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரூ.2 லட்சம் வீதம் இரண்டு முறை கொடுத்து ரூ 4 லட்சத்திற்கான முதலீடு பத்திரங்கள் பெற்றிருந்தார்.
பின்னர் தமது வருமான வரியை தாக்கல் செய்வதற்கு அந்த முதலீடு பத்திரங்களை தாக்கல் செய்த போது அவை போலியானவை என தெரியவந்தது.
இதுகுறித்து சாந்திபிரியா மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசார் போலியான பத்திரங்கள் கொடுத்து ரூபாய் 4 லட்சம் மோசடியாக பெற்ற முத்தம்மாள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் மீது கடந்த ஜூனில் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மேலாளர் முத்தம்மாளை கைது செய்தனர்.