/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வசூல் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வசூல் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வசூல் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வசூல் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வசூல் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி நீக்கம்
ADDED : ஜூன் 18, 2025 10:14 PM

திருநெல்வேலி:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக நிதி வசூல் செய்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்டவை சார்பில் ஜூன் 22 ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கு அர்ஜுன் சம்பத் தலைமையிலான ஹிந்து மக்கள் கட்சியினர் நிதி வசூல் செய்து வருவதாகவும், இந்த மாநாட்டுக்கும் அக்கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்திலும் ரசீதுடன் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து துாத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கிரஷர் நிறுவனத்தில் இருந்து மாநாட்டிற்கு ரூ.10 ஆயிரம் வசூல் செய்த நிர்வாகி ஞானசுந்தரம் என்பவரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என குற்றாலநாதன் தெரிவித்தார்.