ADDED : ஜன 28, 2024 02:06 AM
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடியை சேர்ந்தவர் சங்கர் 42. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் சங்கரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.