ADDED : மார் 20, 2025 02:26 AM

திருநெல்வேலி:பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் நோயாளியிடம் பாலியல் ரீதியாக பேசிய டாக்டர் பாலசந்தரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் டாக்டர் பாலச்சந்தர் 48. பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணிபுரிந்து வந்தார். சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் ஆபாசமாக பாலியல் ரீதியாக பேசியுள்ளார். பெண் புகாரியின் பேரில் போலீசார் டாக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.