/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ வெடிகுண்டுகளை வீசி வாலிபர் கொலை தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வெடிகுண்டுகளை வீசி வாலிபர் கொலை தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
வெடிகுண்டுகளை வீசி வாலிபர் கொலை தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
வெடிகுண்டுகளை வீசி வாலிபர் கொலை தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
வெடிகுண்டுகளை வீசி வாலிபர் கொலை தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூன் 18, 2025 02:44 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே 2008ல் மீனவர் ரீகன் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 4வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவர் கிராமம் கூத்தங்குழி. இங்கே மீனவர்கள் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர். 2008 பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் ராஜேந்திரன் மகன் கணேசன் மற்றும் ஜேசு அருளப்பன் மகன் ரீகன் ஆகிய இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து ரீகன் 22, உள்ளிட்ட சிலரை தினந்தோறும் கூடங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வர உத்தரவிட்டனர்.
2008 ஜனவரி 20 ல் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு டிராக்டரில் 10 பேர் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். விஜயாபதி என்ற இடத்தில் சென்ற போது டிராக்டரை வழிமறித்த 10 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்ட துவங்கினர். மேலும் வெடிகுண்டுகளையும் வீசினர். பின் ரீகனை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தனர். சம்பவ இடத்தை அப்போதைய டி.ஐ.ஜி., கண்ணப்பன், எஸ்.பி., ஸ்ரீதர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரித்தனர். இவ்வழக்கில் கணேசன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி 4வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன் ஜார்ஜ், காந்தி என்ற ராஜேந்தின் 66, அவரது மகன் கணேசன் 40, சிலம்பரசன் 39, ஜான்பால், வினோ, சஞ்சய், ஆன்டன், ஜேம்ஸ், மிக்கேல், அந்தோணி மிக்கேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் தீர்ப்பளித்தார். இவ்வழக்கு விசாரணை நடந்த நிலையில் மூவர் இறந்து விட்டனர். மேலும் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.