/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ஸ்டீயரிங் பழுதான அரசு பஸ் விபத்தை தவிர்த்த டிரைவர் ஸ்டீயரிங் பழுதான அரசு பஸ் விபத்தை தவிர்த்த டிரைவர்
ஸ்டீயரிங் பழுதான அரசு பஸ் விபத்தை தவிர்த்த டிரைவர்
ஸ்டீயரிங் பழுதான அரசு பஸ் விபத்தை தவிர்த்த டிரைவர்
ஸ்டீயரிங் பழுதான அரசு பஸ் விபத்தை தவிர்த்த டிரைவர்
ADDED : ஜூன் 22, 2025 09:25 PM

திருநெல்வேலி:கூடங்குளம் அருகே அரசு பஸ் ஸ்டீயரிங் திடீரென வேலை செய்யாததால் பஸ்சை ஓரமாக நிறுத்தி விபத்தை தவிர்த்தார் டிரைவர்.
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்துார் சென்ற அரசு பஸ் நேற்று முன்தினம் மாலையில் கூடங்குளம் வழியாக கிழக்கு கடற்கரைசாலையில் சென்றது. தவசிப்பாறை என்ற இடத்தில் சென்றபோது அரசு பஸ்சின் ஸ்டீரியங் திடீரென மக்கர் செய்தது.
தொடர்ந்து சென்றால் வேறு வாகனங்கள் மீது மோதியோ, ரோட்டோரம் கவிழ்ந்தோ விபத்துக்குள்ளாகும். டிரைவர் சாமர்த்தியமாக ரோட்டோரம் பஸ்சை மணல் பாங்கான பகுதியில் நிறுத்தி மேற்கொண்டு நகர விடாமல் தடுத்தார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர்.
அடிக்கடி 'மக்கர்'
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பஸ்கள் அடிக்கடி மக்கர் செய்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன் ஆத்தங்கரைபள்ளிவாசலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் ரெட்டியார்பட்டி ஊருக்குள் வந்தபோது திடீரென பிரேக் கட் ஆகி நின்றது. ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் சென்ற அரசு பஸ் இடைகால் அருகே திடீரென ஆக்சில் கட்டாகி வயலுக்குள் சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஒரு பெண் பலியானார்.
நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் இடைகால் அருகே அரசு பஸ்சின் பின் இரண்டு சக்கரங்களும் ஆக்ஸிலுடன் கட் ஆகி தனியே சென்றது பஸ்சின் பின்பகுதி உரசிய படி சிறு தூரம் சென்று நின்றது. இதில் மாணவர்கள் மூன்று பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.