/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
ADDED : செப் 13, 2025 02:26 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி போலி நியமன ஆணை தயாரித்து ரூ.4 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி பாளையஞ்செட்டிக்குளத்தை சேர்ந்த அந்தோணிராஜ் 55, தனது மகளுக்கு அரசு வேலை பெறுவதற்காக, அதே பகுதியில் வசிக்கும் காந்திராஜ்- உஷாராணி தம்பதியரிடம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். மேலும், அவரது அக்கா மகன் தங்கராஜிடம் இருந்தும் ரூ.2 லட்சம் பெற்றும் கொடுத்தார்.
சென்னை தலைமை செயலகத்திற்கு அழைத்துச் சென்ற காந்திராஜ், வணிகவரித்துறையில் அரசுப் பணி என போலியான நியமன ஆணையை வழங்கினார்.இதையறிந்து கேட்டபோது பணமும் திரும்பித் தராமல் ஏமாற்றியதால்
அந்தோணிராஜ் புகாரில் காந்திராஜ் மற்றும் உஷாராணி மீது திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.