/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாணவனிடம் 8 சவரன் பறிப்பு 2 மாணவர், உருக்கியவர் கைது மாணவனிடம் 8 சவரன் பறிப்பு 2 மாணவர், உருக்கியவர் கைது
மாணவனிடம் 8 சவரன் பறிப்பு 2 மாணவர், உருக்கியவர் கைது
மாணவனிடம் 8 சவரன் பறிப்பு 2 மாணவர், உருக்கியவர் கைது
மாணவனிடம் 8 சவரன் பறிப்பு 2 மாணவர், உருக்கியவர் கைது
ADDED : ஜூன் 12, 2025 02:06 AM
திருநெல்வேலி:மாணவனை சிகரெட் புகைக்க செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி, 8 சவரன் நகையை பறித்த மாணவர்கள் இருவர் மற்றும் நகையை வாங்கி உருக்கியவர் என மூவர், கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அலெக்ஸ் நகரை சேர்ந்தவர் தயாப் சாதிக். இவரது, 15 வயது மகன், பணகுடியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
அவருடன் பயிலும் மாணவனின் அண்ணன் மற்றும் சில மாணவர்கள், சிறுவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, சிகரெட் புகைக்க செய்துள்ளனர்.
மாணவன் விளையாட்டாக செய்த அந்த காட்சியை, வீடியோ எடுத்துள்ளனர். பின், 'அதை பெற்றோரிடம் காண்பித்து விடுவோம்' என மிரட்டி, மூன்று மாதங்களாக 8 சவரன் நகைகளை அவரிடம் இருந்து பெற்றுள்ளனர். நகைகளை, கடையில் கொடுத்து உருக்கி, 'ராயல் என்பீல்ட் புல்லட்' பைக் வாங்கி செலவழித்துள்ளனர்.
நகைகள் காணாமல் போனது குறித்து, பக்ரீத் அன்று அறிந்த தயாப் சாதிக்கின் மனைவி, இது குறித்து கணவரிடம் தெரிவித்தார். தயாப் சாதிக், தன் மகனிடம் விசாரித்த போது, அவர் விபரத்தை கூறினார்.
தயாப் சாதிக் புகாரில், பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளை பறித்த இரு மாணவர்கள் மற்றும் அவரிடம் நகை வாங்கி உருக்கிய நபர் என மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.