/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி வாலிபர் கைது சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி வாலிபர் கைது
சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி வாலிபர் கைது
சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி வாலிபர் கைது
சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி வாலிபர் கைது
ADDED : ஜூன் 15, 2024 02:11 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் 35. மே 4ல் ஒரு தரப்பினரால் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த முறைகேடான பத்திரப்பதிவுகள் குறித்து புகார் செய்ததால் ஆத்திரமுற்ற கும்பல் அவரை கொலை செய்ய முயன்றது.
இதில் ஈடுபட்டதாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த முள்ளன் செய்யது அலி, திண்டுக்கல் பேகம்பூர் தாஜுதீன் 26, மேலப்பாளையம் அப்துல் அஜீஸ் 30, ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த சாகுலை 25, போலீசார் நேற்று கைது செய்தனர்.