/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கடன் பிரச்னையில் தொழிலாளி குழந்தைகளுடன் தற்கொலை கடன் பிரச்னையில் தொழிலாளி குழந்தைகளுடன் தற்கொலை
கடன் பிரச்னையில் தொழிலாளி குழந்தைகளுடன் தற்கொலை
கடன் பிரச்னையில் தொழிலாளி குழந்தைகளுடன் தற்கொலை
கடன் பிரச்னையில் தொழிலாளி குழந்தைகளுடன் தற்கொலை
ADDED : ஜூலை 10, 2024 10:42 PM
திருநெல்வேலி:வள்ளியூர் அருகே பணகுடியில் தொழிலாளி கடன் பிரச்னையில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பணகுடி அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ் 41. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு ராபின் 14, காவியா 11 ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். உமா அண்மையில் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். எனவே ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார். மனைவி வெளிநாடு செல்ல வாங்கிய கடன், போதிய வருமானம் இன்மையால் சிரமப்பட்டார். கடன் பிரச்னையில் தத்தளித்தவர் நேற்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தாமும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.