/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலி தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் பெயர் விடுபட்டதால் எதிர்ப்பு கோஷம் திருநெல்வேலி தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் பெயர் விடுபட்டதால் எதிர்ப்பு கோஷம்
திருநெல்வேலி தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் பெயர் விடுபட்டதால் எதிர்ப்பு கோஷம்
திருநெல்வேலி தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் பெயர் விடுபட்டதால் எதிர்ப்பு கோஷம்
திருநெல்வேலி தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் பெயர் விடுபட்டதால் எதிர்ப்பு கோஷம்
ADDED : ஜூலை 28, 2024 03:13 AM
திருநெல்வேலி:மத்திய அரசை கண்டித்து திருநெல்வேலியில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகியின் பெயர் குறிப்பிடாமல் விடுபட்டதால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு கோஷமிட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதிஒதுக்கவில்லை என கண்டித்து தி.மு.க., சார்பில் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்., மைதீன் கான் தலைமை வகித்தனர்.
எம்.எல்.ஏ அப்துல் வஹாப், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநில மாணவரணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசுகையில் ''எட்டு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை.
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சியினருக்கு வாரி வழங்கியுள்ளார். இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்காது. பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தமிழகத்தை வஞ்சிக்கின்றனர் ''என்றார்.
இதனிடையே மத்திய அரசு தமிழகத்திற்கு முட்டை வழங்கியுள்ளதாக கூறி தி.மு.க., மகளிர் அணியினர் அனிதா தலைமையில் பங்கேற்றவர்களுக்கு அவித்த முட்டை வழங்கினர்.
ஐடி அணியினர் சக்திசீதா ராஜவர்மன் தலைமையில் கட்சியினருக்கு அல்வா வழங்கினர். சிலர் காதுகளில் பூ வைத்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட மேடைக்கு எதிரே நின்ற ஒரு நிர்வாகியின் பெயரை மேடையில் பேசியவர் குறிப்பிடாததை கண்டித்து கட்சியினர் கீழே நின்று கோஷம் எழுப்பினர்.
ராஜீவ் காந்தி பேசுவையில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், திடீரென்று மேடையில் இருந்து கீழே இறங்கினார். மேடையில் வெயில் அதிகமாக இருந்ததால் ஆசுவாசப்படுத்தி கொள்ள கீழே இறங்கியதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.