/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ உடல் உறுப்புகள் தானம் முதியவர் உடலுக்கு மரியாதை உடல் உறுப்புகள் தானம் முதியவர் உடலுக்கு மரியாதை
உடல் உறுப்புகள் தானம் முதியவர் உடலுக்கு மரியாதை
உடல் உறுப்புகள் தானம் முதியவர் உடலுக்கு மரியாதை
உடல் உறுப்புகள் தானம் முதியவர் உடலுக்கு மரியாதை
ADDED : ஜூலை 12, 2024 11:12 PM
திருநெல்வேலி:உடல் உறுப்புகள் தானம் செய்த முதியவர் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
நெல்லை தாலுகா சிந்துபூந்துறை - வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் வயது, 73, என்பவர் மூளை வாதம் காரணமாக மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகள் சென்னையில் மியாட் இண்டர்நேஷனல் ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டது.
அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான சிந்துபூந்துறைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பாக நெல்லை ஆர்.டி.ஓ., கண்ணா கருப்பையா நேரில் சென்று கனகராஜின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினார். இதில் நெல்லை தாசில்தார் ஜெயலெட்சுமி உட்பட பங்கேற்றனர்.