/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தேசிய செஸ் போட்டி தமிழக சிறுவர்கள் தேர்வு தேசிய செஸ் போட்டி தமிழக சிறுவர்கள் தேர்வு
தேசிய செஸ் போட்டி தமிழக சிறுவர்கள் தேர்வு
தேசிய செஸ் போட்டி தமிழக சிறுவர்கள் தேர்வு
தேசிய செஸ் போட்டி தமிழக சிறுவர்கள் தேர்வு
ADDED : ஆக 07, 2024 12:44 AM
திருநெல்வேலி:தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தமிழக அணி சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில அளவில் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளை வஉசி ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி துவங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ௨௦௦க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பொது பிரிவில் கோவை இன்பதினேஷ் பாபு முதலிடத்தையும், செங்கல்பட்டு டிக்சன் ஆனந்த் 2ம் இடத்தையும், திருவள்ளூர் மித்ரன்3ம் இடத்தையும் பெற்றனர். மகளிர் பிரிவில் மதுரை ஆரண்யா முதலிடத்தையும், திருப்பத்துார் அர்ச்சிதா ௨ம் இடத்தையும், ஈரோடு ஜேசிகா ௩ம் இடத்தையும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சிவா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். மாநில செஸ் கழக துணை தலைவர் அனந்தராம், நெல்லை மாவட்ட செயலாளர் பால்குமார், துணை தலைவர் பிரதீப்,பொருளாளர் செல்வமணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெறுபவர்கள் மைசூரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கின்றனர்.