/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ஏர்வாடியில் மொஹர்ரம் சந்தனக்கூடு ஊர்வலம் ஏர்வாடியில் மொஹர்ரம் சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடியில் மொஹர்ரம் சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடியில் மொஹர்ரம் சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடியில் மொஹர்ரம் சந்தனக்கூடு ஊர்வலம்
ADDED : ஜூலை 18, 2024 07:16 AM

திருநெல்வேலி, : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் லெப்பைவளைவு பகுதியில், ஹசன் தர்ஹாவும் 6வது தெருவில் ஹுசேன் தர்ஹாவும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் மொஹர்ரம் பண்டிகை பத்து நாட்கள் நடக்கும். மொஹர்ரம் அன்று சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும். இதற்கு முஸ்லிம்களில் ஒரு தரப்பினர், இந்த ஊர்வலம் முஸ்லிம் கலாசாரத்திற்கு எதிரானதாக உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், 2013 மொஹர்ரம் பண்டிகையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்த போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
தொடர்ந்து ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மொஹர்ரம் பண்டிகையை ஒட்டி போதிய போலீஸ் பாதுகாப்புடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது.
அதன் பின், 11ஆண்டுகளுக்குப் பின் நேற்று மாலை லெப்பைவளைவு பகுதியில் இருந்தும், ஆறாம் தெருவில் இருந்தும், இரண்டு சந்தன கூடுகளின் ஊர்வலம் தொடங்கியது. எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின், 6ம் தெரு நடுப்பகுதியில் இரண்டு சந்தனக்கூடுகளும் சந்தித்துக் கொண்டன.