/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மனித உரிமை மீறல் வழக்குகள் ஆணைய உறுப்பினர் விசாரணை மனித உரிமை மீறல் வழக்குகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
மனித உரிமை மீறல் வழக்குகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
மனித உரிமை மீறல் வழக்குகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
மனித உரிமை மீறல் வழக்குகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
ADDED : ஜூலை 12, 2024 11:08 PM
திருநெல்வேலி:நெல்லையில் மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து வண்ணார்பேட்டை, சுற்றுலா மாளிகையில் நேற்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.
பெரும்பாலான வழக்குகள், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரானவை. வழக்குகளில் தொடர்புடைய மனுதாரர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார் ஆணைய உறுப்பினர் முன்பு ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணை நடந்தது. நெல்லை டவுன் போலீசார் சிலரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு உட்பட 20 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வக்கீல்கள் விசாரணையில் ஆஜராகவில்லை. அனைத்து வழக்குகளின் விசாரணை, ஆகஸ்ட் 23க்கு ஒத்தி வைக்கப்பட்டது.