/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தி.மு.க., மேயர் ராஜினாமா ஏற்பு கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தி.மு.க., மேயர் ராஜினாமா ஏற்பு கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
தி.மு.க., மேயர் ராஜினாமா ஏற்பு கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
தி.மு.க., மேயர் ராஜினாமா ஏற்பு கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
தி.மு.க., மேயர் ராஜினாமா ஏற்பு கவுன்சிலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
ADDED : ஜூலை 09, 2024 09:20 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் சரவணன் ராஜினாமா கடிதம் நேற்று மாநகராட்சி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜினாமாவுக்கு பலத்த கரகோஷம் எழுப்பினர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது தி.மு.க., கவுன்சிலர்களே குற்றச்சாட்டு கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். லோக்சபா தேர்தலுக்கு பிறகு மேயர் சரவணன் நீக்கப்படுவார் என கட்சி மேலிடம் உறுதியளித்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் அவரை சென்னைக்கு அழைத்து ராஜினாமா கடிதம் பெற்றனர். நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கமிஷனர் தாக்கரே, துணை மேயர் ராஜு தலைமை வகித்தனர். மேயர் சரவணன் பதவியில் இருந்து விலகும் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் அதனை கவுன்சிலர்களின் பார்வைக்கும் பதிவிற்க்கும் வைப்பதாகவும் துணைமேயர் அறிவித்தார். அனைத்து கவுன்சிலர்களும் ஏற்றுக்கொண்டனர். தி.மு.க., கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஜூன் 28 ல் நடந்த கூட்டத் தீர்மானங்கள் விரைவில் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
புதிய மேயர் தேர்வு குறித்து நேற்று எதுவும் பேசப்படவில்லை. தற்போது திருநெல்வேலி மேயர் பொறுப்பு காலியாக இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுவார்.
தேர்தல் ஆணையம் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேதியை முறைப்படி அறிவிக்கும். அதன்பிறகு தி.மு.க., தலைமை மேயர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் என திருநெல்வேலி மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.